வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துபாய் சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.6,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. துபாய் பயணத்தின் போது ஒப்பந்தமான 6 நிறுவனங்கள் பணிகளை தொடங்கிவிட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு லட்சத்து 95 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவே ஜப்பான், சிங்கப்பூர் சுற்றுப்பயணம். முதலீட்டார்களை சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளேன்.

மேலும், சிங்கப்பூரில் தொழில்நிறுவனங்களுடனான சந்திப்பை முடித்துவிட்டு ஜப்பானில் கீட்டோ நகரில் 200 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறோம் ” என தெரிவித்தார்.