ஹைதராபாத்தில் லாயிட்ஸ் பேங்கிங் குரூப் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளது
லாயிட்ஸ் பேங்கிங் குரூப், பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிகப் பெரிய நிதி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், தொழில்நுட்ப மையம் அமைக்கமுடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.
லாயிட்ஸ் குரூப் டிஜிட்டல் பேங்கிங் சேவையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம், அதன் டிஜிட்டல் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் இதற்கான தொழில்நுட்ப மையத்தை தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.