10, 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10, 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூக சேவைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் சமீபத்தில் வெளியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது. அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து நடிகர் விஜய் சந்தித்து பேச இருப்பதாகவும் அவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஜூன் 17-ந் தேதி நடிகர் விஜய் சந்திக்கிறார் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருக்கிறார். தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்திக்க இருப்பதாகவும், மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்க இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.