இன்று தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை சரிவுடனே தொடங்கியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை NIFTY 0.07 சதவிகிதம் அதாவது 12.4 புள்ளிகள் சரிந்து 17,647.75 ஆகவும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 15.84 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 0.13% அதாவது 56.55 புள்ளிகள் உயர்ந்து 42,321.75 ஆக இருந்தது. நிஃப்டி ஐடி 0.86% அதாவது 233.55 புள்ளிகள் சரிந்து 26,933.40 ஆகவும் இருந்தது. நிஃப்டி 50-ல் ஐச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதற்கு நேர் எதிராக, அப்பல்லோ மருத்துவமனை, இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன. இதற்கிடையில் இன்றைய வர்த்தகத்தில் டாடா காபி நிறுவன பங்குகள் சுமார் ஒரு சதவீதம் வரை சரிவை சந்தித்திருக்கிறது.