167 பள்ளிகளை தத்தெடுத்த நடிகை:லட்சுமி மஞ்சு!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 167 பள்ளிகளை லட்சுமி மஞ்சு தத்தெடுத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு, தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’, ராதா மோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

சமூக சேவை பணிகளில் ஆர்வம் கொண்ட லட்சுமி மஞ்சு தொண்டு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 167 பள்ளிகளை லட்சுமி மஞ்சு தத்தெடுத்துள்ளார்.

இதன் மூலம் 16 ஆயிரத்து 497 மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது, “புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களை மேம்படுத்தும் நோக்கோடு இதை செய்துள்ளோம். தத்தெடுத்த பள்ளிகளில் 50 மாணவர்களை கொண்ட ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும். தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்” என்றார்.