2 ஆண்டுகளில் அரசின் நடவடிக்கையால் தலைநிமிர்த்துள்ளது தமிழ்நாடு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

உலக நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளதால், இங்கு முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும், இந்த நிதிநுட்ப நகரம் மூலமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளால், தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளதால், இங்கு முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும், இந்த நிதிநுட்ப நகரம் மூலமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர், திறன்மிக்க இளைஞர்கள் இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதாகத் தெரிவித்தார்.