2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியை… குவியும் பாராட்டு!

குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு தினமும் 2 ஆற்றை கடந்து சென்று வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் தூர்பூர் கிராமத்தில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கர்மிலா தோப்போ. இவர் தூர்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு தினமும் 2 ஆற்றை கடந்து சென்று மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.

வேறு வழியில்லை. தான் வரும் பாதையில் 2 ஆறுகள் உள்ளன. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தினமும் பள்ளிக்கு வருவதாக ஆசிரியை கர்மிலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்காரில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக தினமும் 2 ஆற்றைக்கடந்து செல்லும் ஆசிரியை கர்மிலா தோப்போவுக்கு பல்ராம்பூர் மாவட்ட கலெக்டர் ரிமிஜியுஎஸ் எக்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இந்த ஆசிரியை தன் பணியை மிகவும் நேர்மையாக செய்கிறார். இதேபோன்ற பணியை மற்ற ஆசிரியர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். மற்ற ஆசிரியர்களும் தங்கள் பணிக்கு விசுவாசமாக இருந்து சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என கலெக்டர் ரிமிஜியுஎஸ் எக்கா கூறியுள்ளார்.