+2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது சி.பி.எஸ்.இ

இன்று காலை 10.50 மணி அளவில் +2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது சி.பி.எஸ்.இ!

2023 ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 97.40 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 21.8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இப்போது வெளியாகி இருக்கும் தேர்வு முடிவுகளில், மொத்தம் 93.12% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் டெல்லியைச் சேர்ந்த அதிதி வாட்ஸ் என்ற மாணவி 99.9% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

+2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www.cbseresults.gov.in மற்றும் www.cbse.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளைத் தெரிந்துக்கொள்ள பதிவு எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்டு ஐ.டி ஆகியவற்றை உள்ளிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.