சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய 2 பேர் கைது!

சீனாவின் அடையாளமாகவும் வரலாற்றின் மிக முக்கியமான ஓர் இடமாகவும் பார்க்கப்படும் சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் அடையாளமாகவும் வரலாற்றின் மிக முக்கியமான ஓர் இடமாகவும் பார்க்கப்படுகிறது சீனப் பெருஞ்சுவர். பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான வரலாற்றுச் சின்னமான இதனை யாரோ சிலர் சேதப்படுத்தி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, யூயு கவுன்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபற்றிய விசாரணையில், 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

அந்த பகுதி வழியே கடந்து செல்வதற்காக, அவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இதில், ஓட்டை போட்டுள்ளனர் என்றும் பராமரிப்பு செய்து அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சுவரின் குறிப்பிட்ட பகுதியின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அவர்கள் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதுபற்றி அவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.