இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அகாடமி விருதுப் பட்டியலில் இடம்பிடித்த 2 இந்திய எழுத்தாளர்கள்!

இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அகாடமி சார்பில் வருடம்தோறும் வழங்கப்படும் சிறந்த படைப்புகளுக்கான விருதுப் பட்டியலில் இரண்டு இந்திய எழுத்தாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.

உலகளாவிய கலாசாரத்துக்கு சிறந்த பங்களிப்பு செய்யும் கதைகளுக்கு பிரிட்டிஷ் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், உலகின் எந்த நாடு, மொழியை சேர்ந்த படைப்புகளாக இருந்தாலும் அவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இங்கிலாந்தில் வெளியிடப்படும். பின்னர் அவற்றில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதன் எழுத்தாளருக்கு சுமார் ரூ.25 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் 2023-ம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் ‘கோர்டிங் இந்தியா’ என்ற கதைக்காக இங்கிலாந்தில் வசிக்கும் நந்தினி தாஸ் என்ற எழுத்தாளரும், ‘தி லாங் டெத் ஆப் எம்பயர்’ என்ற கதை எழுதிய அமெரிக்காவில் உள்ள கிரிஸ் மஞ்சப்ரா என்ற எழுத்தாளர்களும் இடம்படித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இவர்களது படைப்புகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பிரிட்டிஷ் அகாடமி தெரிவித்திருக்கிறது

அடுத்த மாதம் 31-ந் தேதி லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் இதன் வெற்றியாளர் யார் என்பதை அறிவிப்பார்கள். வெற்றிபெறும் நபருக்கு ரூ.25 கோடி பரிசு வழங்கப்படும். மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிரிட்டிஷ் அகாடமி தெரிவித்திருக்கிறது.