200 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக தொடக்கத்தின்போது 210 ஏற்றத்துடன் தொடங்கியது!

இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 210 புள்ளிகள் உயர்வடைந்து 63,626 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 18,875 ஆக இருந்தது.

காலை 10:31 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 266.36 புள்ளிகள் உயர்வடைந்து 63,682.39 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70.90 புள்ளிகள் உயர்ந்து 18,888.30 ஆக இருந்தது.

பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், பவர்கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், கோடாக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டெக் மகேந்திரா, அட்ல்ரா டெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட ஒருசில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்பட்டன.