27வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மனிதர்!

நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் கமி ரிட்டா, 27வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

நேபாளத்தில் நாட்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இதன் உயரம் 29 ஆயிரத்து 32 அடி. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நேபாள நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரரான கமி ரிட்டா கடந்த 1994ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு வரை 26 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, அதிக முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய சாதனை படைத்திருந்தார். ஆனால், நேபாளத்தைச் சேர்ந்த பசாங் தவா என்ற வீரர் 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமியின் சாதனையை சமன் செய்தார். அதனால், தன்னுடைய சாதனையை தக்கவைத்துக்கொள்ள நேற்று 27வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் தன்னுடைய சாதனையை தக்கவைத்துக்கொண்டுள்ளார் கமி ரிட்டா.