கருப்பினத்தவர்கள் 3 பேரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட வெள்ளையர்!

கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர் ஒருவர் கருப்பினத்தவர்கள் மூன்று பேரை துப்பாக்கியா சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

அப்பகுதியின் டாலர் ஜெனரல் என்ற இடத்தில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கருப்பினத்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண், இரு ஆண்கள் என 3 கருப்பினத்தவர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், போலீசார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். நடந்தது இனவெறி தாக்குதலா அல்லது முன்பகை காரணமாக நடந்த சம்பவமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.