30 கிலோ தங்கத்தை நடுக்கடலில் வீசிய கடத்தல்காரர்கள் – கடலில் குதித்து மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்கள்!

மன்னார் வளைகுடா பகுதியில் படகில் 32 கிலோ தங்கத்தை கடத்தியவர்களை கைது செய்த கடலோர காவல்படை. கடலில் தூக்கி வீசப்பட்ட தங்கத்தை மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்கள்

மன்னார் வளைகுடா பகுதியில் படகில் 32 கிலோ தங்கத்தை கடத்தியவர்களை கைது செய்த கடலோர காவல்படை. கடலில் தூக்கி வீசப்பட்ட தங்கத்தை மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்கள்

தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா பகுதியில் இரண்டு மீன்பிடி படகுகளின் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 32.689 கிலோ தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அந்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு அமைப்பு மற்றும் சுங்க இயக்குனரகம் இணைந்து நடுக்கடலில் தேடுதல் வேட்டையில் இறங்கியது. அப்போது மீன்பிடி படகில் கடத்தல்காரர்கள் கொண்டுவந்த 32 கிலோ தங்கத்தை மீட்க முயற்சி செய்தபோது, அதனை அவர்கள் கடலில் வீசியுள்ளனர்.

உடனே கடலோர காவல்படையுடன் வந்திருந்த ஸ்கூபா டைவிங் வீரர்கள் நடுக்கடலில் குதித்து 32 கிலோ தங்கத்தை தேடிக்கண்டுபிடித்து மீட்டனர். பின்னர், தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நாசர், ஹமீது, ரவி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.