திருப்பதியில் பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்க புதிய திட்டம்!

ஏழுமலையானை தரிசிக்க நடந்து வரும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு அடிவாரங்களில் உள்ள தேவஸ்தானத்தினரிடம் ஒப்படைத்தால் அவை திருமலைக்கு வந்து சேர்ந்துவிடும்.தற்போது இந்த நடைமுறை நேற்று முதல் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, உடைமைகளை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ஆதார், செல்போன் எண்கள் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. பின்னர், திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், ரூ.300 சிறப்பு தரிசன மையம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தங்கள் உடைமைகளைத் திரும்ப பெறலாம்