ஏற்றத்துடன் தொடங்கி பின்னர் சரிந்த பங்குச்சந்தை

300 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கி பின்னர் சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 301 புள்ளிகள் உயர்வடைந்து 67,428 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 20,079 ஆக இருந்தது.

காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 89.99 புள்ளிகள் சரிவடைந்து 67,037.09 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.95 புள்ளிகள் சரிந்து 19,951.40 ஆக இருந்தது.

நிறுவனங்களின் தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, டிசிஎஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

பவர்கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ஸ், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசூகி, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், விப்ரோ, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி, டெக் மகேந்திரா பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.