AI @ யுபிஐ குரல் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் அம்சம் – ஆர்பிஐ அறிவிப்பு!

பயனர்கள் தங்கள் குரலை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய அம்சத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.

டிஜிட்டல் பேமென்ட் முறைகளில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி இதனை அறிமுகம் செய்கிறது. இது ‘Conversational பேமென்ட்ஸ்’ என அறியப்படுகிறது. குரல் வழி பயன்பாடு பயனர்கள் பயன்படுத்த மிக எளிதான வகையில் இருக்கின்ற காரணத்தால் இந்த நகர்வை ஆர்பிஐ முன்னெடுத்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கி கொள்கை சார்ந்த அறிக்கையில் நேற்று தெரிவித்தது.

முதற்கட்டமாக இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இது பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக பிராந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்படும் என தகவல். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனர்கள் குரல் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் அம்சத்தை பயன்படுத்தலாம்.

இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனையின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பேமென்ட் துறை சார்ந்த வல்லுநர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இதற்கு நிலையான தரநிலைகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.