சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் : மீண்டும் போட்டியிடுகிறார் ஜோ பைடன்

2024ம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட இருக்கிறது. அதுவும் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே குடியரசு கட்சியின் லார்ரி எல்டரும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவரது டுவிட்டர் பதிவில், “ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்கு துணை நிற்க வேண்டிய தருணம் இது. அவர்கள் தங்களது அடிப்படை சுதந்திரத்திற்காக துணை நிற்க வேண்டும். இது நம்முடைய காலம் என நான் நம்புகிறேன்.” என குறிப்பிட்டிருந்தார்.