தென் கொரிய அதிபருக்கு பரிசு கொடுத்த அமெரிக்க அதிபர் பைடன்!

பாட்டுப்பாடி பார்வையாளர்களை மகிழ்வித்த தென்கொரிய அதிபரிக்கு கிடார் பரிசாக வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அரசுமுறை பயணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை வரவேற்று வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார்.

விருந்து அளிப்பதற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியில் சுற்றியிருந்த பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், கிடார் வாசித்தார் அதனை ரசித்த பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது அவருக்கு அந்த கிடாரையே பரிசாக அளித்து மகிழ்வித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.