பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா உயிரிழப்பு

பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் இயக்குநராக இருந்த அருண்குமார் சின்ஹா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

1985ம் ஆண்டு எஸ்பிஜி( Special Protection Group) பிரிவு நிறுவப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உறுதி செய்யும் வகையில் இந்தப் பிரிவு இயங்கி வருகிறது.

இந்தப் பிரிவின் இயக்குநராக இருந்த அருண் குமார் சின்ஹா (61), உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். குருகிராமில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயரிழந்தார். இதனை மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். அவரது உயிர் பிரிந்த நேரத்தில் உறவினர்கள் அவருடன் மருத்துவமனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு தான் உயிரிழப்புக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

1987-ம் ஆண்டு கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அருண்குமார் சின்ஹா, கடந்த 2016 முதல் எஸ்பிஜி பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு பணி நீட்டிப்பு செய்து, தொடர்ந்து இந்தப் பொறுப்பில் இயங்க அனுமதி