இந்திய அளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழகத்திற்கு விருது!

இந்திய அளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மருத்துவத்துறை நாளுக்கு நாள் புதிய வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவ ரீதியாகவும் பல வளர்ச்சிகளை காண முடிகிறது. மேலும் உறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளிப்பதிலும், உறுப்பு தான விழிப்புணர்விலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்திய அளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழகத்திற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 13வது தேசிய உறுப்பு கொடை தினத்தையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் இருந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.