பாரம்பரிய சிறுதானிய உணவுகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும்!

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராகவும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் இருக்கும் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்தார்.

சென்னை தாம்பரம் – சானடோரியத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் சித்த மருத்துவம் மற்றும் நலவாழ்வுக்கான உணவு முறைகள் குறித்து 2 நாள் சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 10 , 11 ஆகிய தேதிகளில் கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள், ஆராச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.