பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வைப்புத் தொகை ரூ.50,000 கோடியை தாண்டியது!

வங்கிசாரா நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸின் ஒட்டுமொத்த வைப்புத்தொகை ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டியிருப்பதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வங்கிசாரா நிதி நிறுவனங்களில் மிகப் பெரியது பஜாஜ் பைனான்ஸ். இந்நிறுவனம் 2014-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் வைப்புத் தொகை பெற்று வருகிறது. தற்போது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வைப்புத்தொகை ரூ.50 ஆயிரம் கோடியை கடந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வழங்கி வருகிறோம். இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கள் மொத்த வைப்புதார்களில் 40% பேர் மூத்த குடிமக்கள். அதைபோல் மூன்றில் இரண்டு பங்கு வைப்புத் தொகை சில்லறை வாடிக்கையாளர்கள் மூலம் வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.