தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள், உடல் பலவீனத்துடன் போராடுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள், திடீரென்று ஏற்படும் பசியை தணிக்க விரும்புபவர்கள், பயணங்களின் போது மிகவும் எளிமையான மற்றும் சத்தான பழத்தை எடுத்து கொள்ள விருப்புபவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவையாக இருக்கின்றன வாழைப்பழங்கள்.

கடைகளில் எளிதில் கிடைக்கும் மற்றும் நம்மில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிட கூடிய ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக இருக்கின்றன வாழைப்பழங்கள். மலிவு விலையில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களாகவும் இவை இருக்கின்றன.

நம் நாட்டில் மாம்பழத்திற்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படும் பயிராக வாழை இருக்கிறது. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வாழைப்பழங்களில் காணப்படும் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள், உடல் பலவீனத்துடன் போராடுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள், திடீரென்று ஏற்படும் பசியை தணிக்க விரும்புபவர்கள், பயணங்களின் போது மிகவும் எளிமையான மற்றும் சத்தான பழத்தை எடுத்து கொள்ள விருப்புபவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவையாக இருக்கின்றன வாழைப்பழங்கள்.

வாழைப்பழத்தில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின் சி, மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் பி6, செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் டயட்ரி ஃபைபர், ரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் இந்த பழத்தில் நிறைந்துள்ளன. தினசரி வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது: ஏற்கனவே குறிப்பிட்டபடி வாழைப்பழங்களில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் டயட்ரி ஃபைபர் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக வாழைப்பழங்கள் ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றாக இருக்கின்றன.

பொட்டாசியத்தின் சிறந்த மூலம்: பொட்டாசியத்தின் சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக வாழைப்பழங்கள் இருக்கின்றன. வாழைப்பழங்களில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் மற்றும் சிறந்த தசை செயல்பாட்டிற்கும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

ஆற்றலை அதிகரிக்க செய்கிறது: வாழைப்பழங்களில் காணப்படும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக வழங்குவதோடு, ஆற்றலை நீண்ட நேரம் நீடிக்கவும் செய்கின்றன. ஒர்கவுட்டிற்கு முன்பு எடுத்து கொள்ள வேண்டிய அல்லது மதிய நேர ஸ்னாக்ஸிற்கு சிறந்த தேர்வாக வாழைப்பழங்கள் இருக்கின்றன.

சிறந்த செரிமானம்: வாழைப்பழங்களில் காணப்படும் டயட்ரி ஃபைபர் குறிப்பாக pectin, வழக்கமான குடல் இயக்கங்களை (regular bowel movements) ஊக்குவிக்கிறது. மேலும் வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சனைகளை தடுப்பதோடு ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஜீரணிக்க எளிதானவை: அடிக்கடி செரிமான அசௌகரியம் ஏற்படுபவர்களுக்கு, சென்சிட்டிவ் ஸ்டோமெக் கொண்டவர்களுக்கு வாழைப்பழங்கள் சிறந்தவை. வாழைப்பழங்கள் எளிதில் ஜீரணிக்க கூடியயாக இருப்பதோடு வயிற்று கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

இதய ஆரோக்கியம்: வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது. பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்கள் உள்ளிட்ட உணவுகளை தவறாமல் எடுத்து கொள்வது அதிகரித்த ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைக்கிறது.

உடல் எடை: வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டாலும் இந்த பழங்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. அதே சமயம் வாழைப்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உங்கள் டயட்டில் இந்த பழத்தை சேர்ப்பது நீங்கள் வயிறு நிறைவாகவும், திருப்தியாகவும் இருப்பதை போல உணரலாம். இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

மனநிலையை மேம்படுத்துகிறது: வாழைப்பழத்தில் காணப்படும் வைட்டமின் பி6 மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மனநிலையை மேம்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்ஸ்களின் உற்பத்தியில் Vitamin B6 பங்கு வைகிக்கிறது.

சரும ஆரோக்கியம்: வாழைப்பழங்களில் காணப்படும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை பராமரிக்கிறது. மேலும் சரும சுருக்கங்கள், கோடுகள் போன்ற வயதாகும் அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதன் மூலம் வாழைப்பழங்கள் சரும ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.

இயற்கையான இனிப்பு: இனிப்பு சாப்பிட வேண்டும் என்று ஏற்படும் sweet cravings-ஐ தணிக்க ஆரோக்கியமான வாழைப்பழங்களில் இருக்கும் இயற்கையான இனிப்புகள் உதவுகின்றன. ஸ்மூத்தீஸ், ஓட்மீல் அல்லது baked goods-களில் வாழைப்பழங்கள் நேச்சுரல் ஸ்வீட்னராக பயன்படுத்தப்படலாம்.