பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பிடித்த பயணிகள் படகு – உயிருக்கு ஆபத்தான நிலையில் 120 பயணிகள்?

பிலிப்பைன்ஸில் தொடரும் படகு விபத்துகள். இன்று டுக்கடலில் பயணிகள் படகில் தீ விபத்து ஏற்பட்டதால் 120க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன ஆனது?

பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல் மாகாணத்திற்குபயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனர்.

நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது படகில் திடீரென தீ பிடித்திருக்கிறது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியதால், படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது வரை சிலரை மட்டுமே மீட்டுள்ளனர். பெரும்பாலோனோரின் நிலை என்ன என்பதே தெரியவில்லை. மேலும் எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸில் படகு, கப்பலில் தீ விபத்து ஏற்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே இப்படியான கோர சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது. அதிலும் 1987ல் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் ferry Dona Paz sank என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. அதில் 4300 பேர் உயிரிழந்தனர். அதேபோல கடந்த மார்ச் மாதம் நடந்த படகு விபத்தில் 36 பயணிகள் உயிரிழந்தனர்.