மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்து – 23 பேர் மரணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலத்தின் மீது இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 23 பேர் மரணம்

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள தசங்கோ பகுதியில் ஒரு பாலத்தின் மீது தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளது. அதில் பயணித்த 23 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 25 பேருக்கு காயம் ஏற்பட்டத்தில் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் கார்கோன் மாவட்ட காவல்துறை எஸ்.பி ராகேஷ் குப்தா.