மத்திய பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளர் வேலை : 1800 காலிப்பணியிடங்கள்!

மத்திய பாதுகாப்பு படை, டெல்லி காவல்படையில் உதவி ஆய்வாளர் வேலைக்கு 1876 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள.

டெல்லி காவல்படை, மத்திய பாதுகாப்பு படை ஆகியவற்றில் 1876 உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வினை அறிவித்திருக்கிறது Staff Selection Comission.

டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலைக்கு ஆண்களுக்கு 109 இடங்களும், பெண்களுக்கு 53 இடங்களும் உள்ளன. அதேபோல, மத்திய பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளர் வேலைக்கு 1714 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். இந்தப் பணிக்கு ரூ.35,400 முதல் 1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

01.08.2023 தேதியின் படி 20 வயதுக்கு குறையாமலும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். துறையில் ஏற்கனவே பணியாற்றுபவர்கள் அதாவது கான்ஸ்டபிள் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு 30 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். உடற்தகுதி தேர்வில் 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் அரசு விதிமுறைப்படி தளர்வுகள் அளிக்கப்படும்.

www.ssc.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 15.