அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.