அமெரிக்க அதிபரை சந்தித்து கை குலுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கை குலுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்திய தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று இரவு உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதனடிப்படையில் குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் இந்த விருந்தில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இரு தலைவர்களும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் சந்தித்து பேசிய புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.