coca cola – Thrive மத்தியிலான பேச்சுவார்த்தை போட்டியை எதிகொள்ள காத்திருக்கும் Campa Cola

coca cola – Thrive மத்தியிலான பேச்சுவார்த்தை போட்டியை எதிகொள்ள காத்திருக்கும் Campa Cola

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கேம்பா பிராண்ட்டின் கீழ் 3 விதமான சுவைகளில் குளிர்பானத்தை அறிமுகம் செய்ததில் இருந்து இந்தியாவில் தற்போது அதிகப்படியான போட்டியை எதிர்கொண்டு வரும் உலகின் முன்னனி குளிர்பான விற்பனை நிறுவனமான coca cola, இந்தியாவில் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க நிறுவனமான coca cola தனது வர்த்தகத்தை வலிமையாக்கும் விதமாக ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் தளமான Thrive நிறுவனத்தில் சிறிய அளவிலான பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதோடு இதற்கான பேச்சுவார்த்தையும் துவங்கியுள்ளது

Thrive நிறுவனம் இந்தியாவில் 5500 உணவுகள் உடன் இணைந்து தனது உணவு டெலிவரி சேவையை வழங்கி வருவது மட்டும் அல்லாமல் பல சந்தையில் Thrive நிறுவனம் ஸ்விக்கி, சோமேட்டோ உடன் போட்டிப்போட்டு வருகிறது. coca cola – Thrive மத்தியிலான பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் இந்திய ஸ்டார்ட்அப்-ல் கோகோ கோலா-வின் முதல் முதலீடாக இருக்கும். 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் டிாமினோஸ் பீட்சா-வை இயக்கும் ஜூப்லியன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனம் Thrive நிறுவனத்தில் சுமார் 35 சதவீத பங்குகளை வெறும் 24.75 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த முதலீடு மூலம் Thrive நிறுவனம் ஜூப்லியன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு டெலிவரி சேவையும், வாடிக்கையாளர்களையும் பகிர ஒப்புக்கொண்டது.coca cola நிறுவனம் இந்தியாவில் தற்போது coca cola , thumps up , Minute Maid juices, Georgia coffee மற்றும் Kinley குடிநீர் ஆகியவற்றை McDonald’s போன்ற பல முக்கிய கடைகளில் கூட்டணி வைப்பது மூலம் coca cola பிராண்ட் குளிர்பானத்தை மட்டுமே விற்பனை செய்யும் வசதியை கொண்டு உள்ளது.

நீண்ட கால வர்த்தக வளர்ச்சிக்கு அடிப்போடும் விதமாக கோகோ கோலா தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுகள் உடன் காம்போ-வாக coca cola பிராண்ட் குளிர்பானங்களை விற்பனை செய்யும் முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் coca cola முக்கியமான தொலைநோக்கு திட்டத்துடன் களமிறங்கி உள்ளது