சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே – பஞ்சாப் அணி மோதல் : த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.

16வது ஐபிஎல் தொடரின் 14வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றத்தில். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணி மோதியது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் ஆடியது. 20 ஓவர்களின் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.

200 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 4.2 ஓவரில் 50 ரன்களை எடுத்து சிறப்பாக விளையாடியது. ஷிகர் தவான் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து வீரர்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்தனர்.

ஆனால், ஆட்டம் இறுதி வரை சுருசுருப்பாகவும் ரசிகர்களை உற்சாகத்துடனும் யாருக்கு வெற்றி கிடைக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்புடனும் வைத்திந்திருந்ததன இரண்டு அணிகளும். கடைசி பந்தில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த மூன்று ரன்களையும் ஓடியே எடுத்து வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை இருக்கையின் நுணிக்கே கொண்டுவந்த ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணி தோல்வியடைந்தது.