ஒன்றிய அரசின் Power Grid Corporation Of India Limited நிறுவனத்தில் Diploma Trainee வேலை – மாதம் ரூ.27,500 ஊதியம்!

மத்திய அரசின் மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Power Grid Corporation Of India Limited நிறுவனத்தில் டிப்ளமோ ட்ரெய்னி வேலைக்கு 400க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Power Grid Corporation Of India Limited நிறுவனத்தில் Diploma Trainee வேலைக்கு 425 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Electrical பிரிவில் Diploma Trainee வேலைக்கு 344 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Electrical, Electrical And Electronics, Power Systems Engineering, Power Engineering பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Civil பிரிவில் Diploma Trainee வேலைக்கு 68 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Civil பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Electronics பிரிவில் Diploma Trainee வேலைக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க,Electronics, Electronics And Communication, Electronics And Tele Communication, Electronics And Electrical Communication, Telecommunication Engineering
ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

முதல் ஓராண்டுகால பயிற்சியின்போது மாதம் ரூ.27,500 ஊதியம் அளிக்கப்படும். அதன் பின்னர், Junior Engineer Group 4 பிரிவின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.17 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். www.powergrid.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 23.