எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட வெங்கட் பிரபு

எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படத்தின் டிரெய்லரை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இயகுனர் வெங்கட் பிரபு

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ளது பொம்மை திரைப்படம். இந்த திரைப்படம் வருகிற 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டூடியோஸ் வழங்கும் இந்த திரைப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர் தீபா டி துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொம்மை திரைப்படத்தின் முதல் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், திரைப்படம் இன்னும் 10 நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.