சென்னையில் உள்ள தக்‌ஷின் பாரத்தில் வேலைவாய்ப்பு – 10வது, +2 படித்திருந்தால் போதும், மாதம் ரூ.19,000 ஊதியம்!

சென்னையில் உள்ள இந்திய ராணுவ தலைமை அலுவலகமான தக்‌ஷின் பாரத்தில் 10க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள இந்திய ராணுவத்தின் தலைமை அலுவலகமான தக்‌ஷின் பாரத்தில் Lower Division Clerk, Cook, Multi Tasking Staff ஆகிய வேலைகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Lower Division Clerk வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும். 18 வயது முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சமையலர் வேலைக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்திய உணவுகளை சமைக்க தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும். 18 வயது முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Messenger பிரிவில் Multi Tasking Staff வேலைக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும். 18 வயது முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Gardener பிரிவில் Multi Tasking Staff வேலைக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும். 18 வயது முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். Headquarters Dakshin Bharat Area, Island Grounds, Chennai – 600 009 என்ற முகவரியில் தேர்வு நடைபெறும்.

www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 21.