மத்திய அரசின் Central Warehousing Corporation நிறுவனத்தில் வேலைவாய்ப்பு:மாதம் ரூ.40,000 முதல் ரூ.1.40 வரை லட்சம் சம்பளம்!

மத்திய அரசின் Central Warehousing Corporation நிறுவனத்தில் Assistant Engineer, Accountant, Superintendent, Junior Technical Assistant ஆகிய வேலைகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் Central Warehousing Corporation நிறுவனத்தில் Assistant Engineer, Accountant, Superintendent, Junior Technical Assistant ஆகிய வேலைகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் Central Warehousing Corporation நிறுவனத்தில் Assistant Engineer, Accountant, Superintendent, Junior Technical Assistant ஆகிய வேலைகளுக்கு 139 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவில் பிரிவில் Assistant Engineer வேலைக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Civil Engineering பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் அளிக்கப்படும். 25.09.1993ம் தேதியின்படி 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எலெக்ட்ரிக்கல் பிரிவில் Assistant Engineer வேலைக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Electrical Engineering பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் அளிக்கப்படும். 25.09.1993ம் தேதியின்படி 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Accountant வேலைக்கு 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, B.Com, BA Commerce, Chartered Accountant, Costs and Works
Accountants ஆகிய பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் அளிக்கப்படும். 25.09.1993ம் தேதியின்படி 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Superintendent வேலைக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் அளிக்கப்படும். 25.09.1993ம் தேதியின்படி 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Technical Assistant வேலைக்கு 81 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, உயிரியல், வேதியியல், உயிர் வேதியியல் பாடப்பிரிவுகளுடன் கூடிய வேளாண்மை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை ஊதியம் அளிக்கப்படும். 25.09.1993ம் தேதியின்படி 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை, அம்பத்தூர், குரோம்பேட்டை, கோவை, தூத்துக்குடி, திருச்சி மாதவரம், நாகர்கோவில், உடுமைலைப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

www.cewacor.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 24.