தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பது நியாயமானதே – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!

இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற திமுகவின் போராட்டம் சரியானது என தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, திமுக போராட்டம், மத்திய அரசு கொண்டுவரும் சட்ட வரைவு, நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களை பேசியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்பது நியாயமே. திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்பதற்கான பல காரணங்களை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மத்திய அரசு இந்த விவகாரத்தில் அசைந்து கொடுப்பது போன்று எனக்குத் தெரியவில்லை.

ஆங்கிலத்தில் சட்டம் இருக்கும் போது ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயார் செய்யப்படுகிறது. ஆங்கிலத்தில் சட்டத்தை இயற்றிவிட்டு பெயர் மட்டும் ஹிந்தியில் வைக்கிறார்கள்.

ஒவ்வோரு ஆண்டும் மனிதர்களுக்கு வயது கூடுவதைப் போல, நாட்டின் பொருளாதாரமும், வருமானமும் கூடிக் கொண்டேதான் இருக்கும். சில ஆண்டுகள் குறைந்த அளவில் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம்” என அவர் தெவித்தார்.