தேர்தல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்!

தேர்தல் மோசடி வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரை 2 லட்சம் டாலர் உத்திரவாதத்தின் மூனல் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது அமெரிக்காவின் இன்னொரு சோகமான நாள். வழக்குத் தொடுப்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது” என தெரிவித்துள்ளார்.