ஏப்ரல் – ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் GDP 7.8 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தகவல்!
தேசிய புள்ளியியல் அலுவலகம் 2023-24 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் காலாண்டு ஜிடிபி 7.8% ஆக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் ஜிடிபி 13.1 சதவீதமாக இருந்தது.
வேளாண் துறையின் வளர்ச்சி 3.5% வளர்ச்சி அடைந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது 2.4% ஆக இருந்தது. அதேசமயம், உற்பத்தித் துறையில் வளர்ச்சி 6.1-லிருந்து 4.7% ஆக குறைந்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் GDP 7.8% ஆக உள்ள நிலையில் சீனாவின் ஜிடிபி 6.3% ஆக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு சேவைத் துறையின் வளர்ச்சியும் மத்திய அரசின் மூலதன செலவினமும் முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.