தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அலுவலக உதவியாளர் வேலை – டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் உள்ள தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அலுவலக உதவியாளர் வேலை…

சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அலுவலக உதவியாளர் வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணாபிக்க, ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் அனுபவம் இருக்க வேண்டும்; கணினி அறிவு இருக்க வேண்டும். நீதிமன்றம்/ தீர்பாயங்களில் முன்னனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தப் பணிக்கு 21 வயது முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து Registrar, National Green Tribunal, Southern Zone Bench, kalas Mahal, PWD Estate, Chepauk, chennai – 600005 என்ற) முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் மே 3.