EPFO என சொல்லக்கூடிய தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்தில் Social security Assistant, Stenographer ஆகிய வேலைகளுக்கு 2859 காலிப்பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள்…
Social security Assistant என சொல்லக்கூடிய சமூக நல அலுவலர் பணிக்கு மொத்தம் 2674 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும்.
26.04.2023 தேதியின்படி 18 வயது முதல் 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, Computer Skill Test ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதேபோல Stenographer வேலைக்கு 185 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
26.04.2023 தேதியின்படி 18 வயது முதல் 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, சுருக்கெழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 26.