அரசு ஊழியர்களின் சொத்து பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவது அரசின் கொள்கை முடிவு:நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!

மதுரையைச் சேர்ந்த நபர் தொடர்ந்த வழக்கில் அரசு ஊழியர்களின் சொத்து பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவது அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசு துறைகளில் ஊழலை தடுக்கும் விதமாக அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை ஆண்டு தோறும் வெளியிட உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனர்.

ஆனால், அதை இணையத்தில் வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.