நிச்சயம் நான் இருப்பேன்: தன்னை டேக் செய்த ரசிகருக்கு தினேஷ் கார்த்திக் பதில்!

நிச்சயம் நான் இருப்பேன்” – தன்னை டேக் செய்த ரசிகருக்கு தினேஷ் கார்த்திக்.

 எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் தான் இருப்பேன் என தன்னை டேக் செய்த ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளார் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்.

38 வயதான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக கடந்த 2004 முதல் விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.

எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரிஷப் பந்த் விபத்தில் சிக்கிய காரணத்தால் கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு இந்த தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர் ஒருவர் யார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என வாக்கெடுப்பு நடத்தினார். அதில் ரசிகர் ஒருவர் தினேஷ் கார்த்திக்கை டேக் செய்தார். “நிச்சயம் உலகக் கோப்பை தொடரில் நான் இருப்பேன். அது மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனை பணியை அவர் கவனித்து வருகிறார்.