2030-இல் இந்தியா 6.7 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்:ஆய்வறிக்கையில் தகவல்!

2030ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.7 ட்ரில்லியன் டாலரை எட்டும் என எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், “2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.4 டிரில்லியன் டாலர் ஆகும். இது 2030-31 நிதி ஆண்டில் 6.7 டிரில்லியன் டாலராக உயரும். தற்போது இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 2,500 டாலராக உள்ளது. இது 2030-31 நிதி ஆண்டில் 4,500 டாலராக உயரும்.

மேலும் நடப்பு ஆண்டு முதல் இந்தியா ஆண்டுக்கு 6.7 சதவீத வளர்ச்சியில் பயணிக்கும். ஜிஎஸ்டி பலனை இந்தியா உணரத் தொடங்கும். திவால் நடைமுறைச் சட்டத்தால் நிறுவனங்களின் நிதி நிலை ஆரோக்கியமாக இருக்கும். இந்திய பொருளாதார வளர்ச்சியில் சேவைத் துறை முதன்மையாக இருக்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.