இனி இந்திய ரூபாயை இலங்கையில் பயப்படுத்தலாம்!

இனி இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்தலாம் என அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.

பிக்கி எனும் பெயரில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் வீரசிங்கே “இலங்கையின் மத்திய வங்கி, இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள், இனி இந்திய ரூபாய்களையே இங்கே பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். மேலும் இந்தியா – இலங்கை இருநாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளவும் விரும்புகிறோம்.” என அந்தக் கருத்தரங்கத்தில் பேசினார்.

இதுவரை 17 நாடுகள் இந்திய ரூபாயை அவர்களது நாட்டில் பரிவர்த்தனைக்காக பயன்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்த நிலையில் இப்போது 18வது நாடாக இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இனி இலங்கைக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பண பரிவர்த்தனை எளிமையானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.