இந்திய பங்குச்சந்தைகள் இன்று 300 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது!

வார முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தை 335 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியிருக்கிறது.

இன்றைய வர்த்தக நாளில் 65,153 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 335.55 புள்ளிகள் சரிந்து 64,987 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 123.30 புள்ளிகள் சரிந்து 19,305 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா வங்கி, நெஸ்லே இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

மேலும், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.