இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வடைந்து 65,256 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 19,409 ஆக இருந்தது.
காலை 10:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 84.21 புள்ளிகள் உயர்வடைந்து 65,300.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 19.00 புள்ளிகள் உயர்ந்து 19,412.60 ஆக இருந்தது.
தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
மேலும், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.