பிச்சை எடுத்தே 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்த பிச்சைக்காரர் – மும்பையில் நடந்த சுவாரசியம்!

மும்பையில் பிச்சை எடுத்தே 7 கோடியே 50 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார் ஒருவர்.

அடுத்த வேலை சோற்றுக்கே என்ன செய்வது என தெரியாமல் வேலை எதுவும் கிடைக்காமல் வேறு வழியே இல்லாமல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிச்சை எடுத்து வரும் பலரையும் பார்த்திருப்போம். ஏன் போகிற வழியில் நாம் கூட அவர்களது தட்டில் பணம் போட்டு உதவி செய்திருப்போம்.

ஆனால், கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக பிச்சை எடுத்தே கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார் ஒருவர். அவர் பெயர் பரத் ஜெயின். பொருளாதார ரீதியாக மும்பையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

இவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ.7 கோடியே 50 லட்சம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் 10 மணி முதல் 12 மணி நேரம் பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரம் வரையில் சம்பாதித்திருக்கிறார். பிச்சை எடுத்தாவது என்னுடைஅ குழந்தைகளை பெரிய கான்வெண்ட்டில் படிக்க வைக்க வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. அப்படி இவர் பிச்சை எடுத்து தன்னுடைய குழந்தைகளை கான்வெண்ட்டில் படிக்க வைத்து வருகிறார்.

இதுதவிர மும்பை தானே பகுதியில் 2 கடைகள் வைத்திருப்பதாகவும், மும்பையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்கி உள்ளார். அதனை ரூ.30 ஆயிரத்திற்கு வாடகைக்கும் விட்டிருக்கிறார் என சொல்கிறார்கள். அவரது குடும்பம் மாற்று வருமானம் பெறும் வகையில் எழுதுபொருட்கள் கடை நடத்தி வருவதாகவும் இத்தனை கோடி சொத்து சேர்த்தும் இப்போதும் பரத் ஜெயின் பிச்சை எடுத்து வருவதாக சொல்கிறனர். இப்போது இந்த செய்தி வடமாநிலத்தில் வைரலாகி வருகிறது. இவருக்குப் பிச்சை போட்ட நபர்களின் மனநிலை எப்படி இருக்குமோ? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.