இந்தியர்கள் 5 பேருக்கு சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது: உலகம் முழுவதும் 17 பேர் தேர்வு!

அமெரிக்காவின் ஆக்சன் ஃபார் நேச்சர் என்ற அமைப்பு வருடம்தோறும் உலகை அச்சுறுத்தி வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கான தீர்வுகளை உருவாக்கும் 8 வயது முதல் 16 வயது வரை உள்ள இளைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க தேவையான முன்முயற்சிகளை மேற்கொண்டதில் உலகம் முழுவதிலுமிருந்து 17 இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். மீரட்டைச் சேர்ந்த எய்ஹா தீக்சித், பெங்களூரைச் சேர்ந்த மன்யா ஹர்ஷா, நிர்வான் சோமானி, புதுடெல்லியைச் சேர்ந்த மன்னத் கவுர், மும்பையைச் சேர்ந்த கர்னவ் ரஸ்தோகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.