வெளியான இரண்டாவது நாளில் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த ஜெயிலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி தற்போது இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இதில் தமிழகத்தில் ரூ.23 கோடி வசூல் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. படம் வெளியான 2 நாட்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.104 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும் இது ரஜினியின் 11-வது ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த படம் எனவும் சொல்லப்படுகிறது.