வெற்றிகரமாக ‘ஸ்லிம்’ விண்கலத்தை விண்ணில் ஏவிய ஜப்பான்!

நிலவை ஆய்வு செய்ய ஸ்லிம் விண்கலத்தை விண்ணில் ஏவியது ஜப்பான்.

நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பவதற்கான திட்டத்தை உருவாக்கியது ஜப்பான். இந்நிலையில், எச்.2.ஏ ராக்கெட் மூலமாக ஸ்லிம் விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மோசமான வானிலை காரணமாக எச்.2ஏ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டத்தை தள்ளி வைத்திருந்த ஜப்பான், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

ஜப்பான் நாட்டின் தென்மேற்கே ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.